search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவணங்கள் ஆய்வு"

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
    • சொத்து குவிப்பு புகார் எதிரொலி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் லதா சந்திரன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2011 முதல் 2016 வரை ஆளுர் பேரூராட்சி தலைவியாக இருந்தார்.

    அப்போது வருமா னத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் லதா சந்திரன் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டேர்தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார் நேற்று லதா சந்திரன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். அப்போது அவரது கணவர் மற்றும் 2 மகன்களும் இருந்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    பீரோவில் இருந்து ஆவணங்களையும் சரி பார்த்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 2.30 மணி வரை நடந்தது. 8½ மணி நேரம் நடந்த இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றி னார்கள். அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஆவணங்களை யும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். லதா சந்திரன் குறிப்பிட்டுள்ள வரவு-செலவு கணக்கு எவ்வளவு? என்பதை கணக்கிட்டு ஆவணங்க ளில் உள்ள தகவல்க ளையும் சரிபார்த்து வருகிறார்கள். இதை வைத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×